புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

ஏயர் ஏசியா விபத்து; துணை விமானியின் சடலம் மீட்பு


news
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டிருந்ததுடன் பயணிகள் பலரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
 
எனினும் மீட்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இதுவரை 101 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீட்பு குழுவினர் விமானத்தில் பைலட்டுகள் அமரும் முன் பகுதியை கண்டுபிடித்தனர்.
 
அதற்குள் சென்று தேடிய போது ஒரு சடலம் கிடைத்ததுள்ளது. எனினும் சிதைந்த நிலையில் இருந்ததுடன்  உடலில் விமானிகள் அணியும் சீருடையும்  இருந்தது.
 
எனவே இது துணை விமானி, ரெமி பலேஷல் உடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த இவர் இந்த விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வந்தார்.
 
மேலும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad