புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

தமிழர்களுக்கான பரிகார நீதியினை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளெங்கும் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் தீவிரம்


அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பிலான விழிப்புக் கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் பாரிசின் தொடர்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச்சிலும் லண்டனிலும் இடம்பெற்றிருந்த இப்பொதுக்கூட்டங்களில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி காணொளிவாயிலாக இணைந்து கொண்டு கருத்துரையினை வழங்கியிருந்தார்.
1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை எனத் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அதுபோன்றே மீண்டும் இன்று அனைத்துலக சமூகத்தினை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இரு நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருந்த ஊடகர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பதில் அளித்திருந்தார்.
சுவிஸ்:
"சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கான பரிகாரநீதி கோரலும்" எனும் தலைப்பில் சூரிச்சின் வொல்க்கவுஸ் மண்டபத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.
நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் அதன்பின்னுள்ள நுண்ணரசியல் தொடர்பில் கருத்துரையினை வழங்கியிருக்க, சூரிச் பிராந்திய அரசவை பிரதிநிதிகள் செ.ஜெயம், சா.ஜெயசீலன் உட்பட மற்றும் அமைச்சரவை செயலர் மு.சுகிந்தன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தின் ஒரு தரப்பாக உள்ள சர்வதேச தரப்புடனான தமிழர் தரப்பின் நிலைபாடுகள் எத்தகைய போக்கில் அமையப் போகின்றது பற்றிய தனது கரிசனையினை கருத்துப்பரிமாற்றத்தின் போது ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்கள் முன்வைத்திருந்தார்.
நிறைவில் எதிர்வரும் மார்ச்16ம் நாள் ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெற இருக்கின்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு கோரியிருந்ததோடு, இதற்கான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் கூறப்பட்டிருந்தது.
பிரித்தானியா:
"ஐ.நா மனித உரிமைமச்சபையும் தமிழர்களுக்கான பரிகாரநீதி கோரலும்" எனும் தலைப்பில் இடம்பெற்றிருந்த இப்பொதுக்கூட்டத்தினை பிரதமர் பணிமனையின் பிரித்தானிய இயக்குனர் வசந்தன் அவர்கள் நிகழ்வரங்கினை தொடங்கிவைக்க, துணை அரசவைத் தலைவர் தில்லை நடராஜா அவர்கள் கூட்டத்தினை நடத்தியிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 10 பாரிய செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் பணினையின் தலைமைச் செயலர் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் விளக்கமளித்திருந்தார்.
பொதுசன தளத்தில் அனைத்துலக விசாரணையினை வலுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற பரப்புரை பயணம் குறித்து அரசவை உறுப்பினர் அகிலன் அவர்களது கருத்துரையோடு, அரசவை உறுப்பினர் கோபிநாத் அவர்களுடைய எழுச்சியுரையும் இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெற இருக்கின்ற தேர்தலில் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தும் Tamils 4 Democracy - UK எனும் செயல்முனைப்பு குறித்து பொதுசன விவகாரங்கள் அமைச்சின் பிரித்தானியச் செயலர் ருத்திராபதி சேகர் அவர்கள் விளக்கியிருந்தார்.
சாரங்கி தமிழ்பாடசாலை மாணவர்கள் வரவேற்ப்பு வணக்க நடத்தினையும் கவிதையினையும் வழங்கியிருக்க, வட தமிழீழத்தின் சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையக்கழிவினால் குடாநாட்டில் ஏற்பட்டு நீர் அசுத்தமாகும் விவகாரம் குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டிருந்தது.

ad

ad