புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

புயலால் கிடைத்த நன்மை?

உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவில் புயல் காரணமாக பொதுமக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும்  நிலையில் பங்களாதேஷ்  கிரிக்கெட் அணிக்கு இந்தப் புயலால் அதிர்ஷ்டம்   அடித்துள்ளது என்றே கூற வேண்டும்.
உலகக் கிண்ணப் போட்டியில் ஏ பிரிவில் சனிக்கிழமை நடைபெறவிருந்த  அவுஸ்திரேலியா  பங்களாதேஷ்  அணிகளுக்கிடையேயான ஆட்டம் மழை காரணமாக  இரத்து செய்யப்பட்டது. பிரிஸ்பேன் நகரில்  உள்ள கப்பா மைதானத்தில் இந்த ஆட்டம் காலை 9 மணியளவில்  தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக பிரிஸ்பேனைத் தாக்கி வந்த லாம் புயலால் அந்நகரில்  பலத்த மழை பெய்து வந்தது.
 மழை காரணமாக போட்டியை நடத்துவது சாத்தியமில்லாமல் போனதையடுத்து இந்த ஆட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் பங்களாதேஷ் அணிக்கும் ஒரு  புள்ளி கிடைத்தது. ஒரு வேளை இந்த போட்டி நடைபெற்றிருந்தால் பெரும்பாலும் அவுஸ்திரேலிய அணிதான் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் போட்டி இரத்து செய்யப்பட்டதால் 2 போட்டிகள் மூலம் 3 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின்  அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.   அவுஸ்திரேலிய அணியும் 2 ஆட்டங்களின் மூலம் 3 புள்ளிகளை ஈட்டி 2ஆவது இடத்தில் இருக்கின்றது. இந்த பிரிவில் 3  போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ad

ad