புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

இந்தியா நோக்கிச் சென்றார் மைத்திரி - இந்திரா காந்தி விமான நிலையத்தில் மைத்திரிக்கு மகத்தான வரவேற்பு



இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது.
இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர்
அதிகாரிகள் விமான நிலையத்தில் ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும் வரவேற்றனர்.
ஜனாதிபதியையும் பாரியாரையும் தங்கும் ஹோட்டலில் இலங்கை சிறுவர்கள் இருவர் வரவேற்றனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்சன் செனவிரத்ன ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

ஹைதரபாத்தில் நாளை மோடியை சந்திக்கிறார் மைத்திரி- இந்தியா நோக்கிச் சென்றார் ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பு நாளை நண்பகல் ஹைதரபாத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர்.
ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் போது இருநாட்டு நட்புறவுகள், தொழில் வர்த்தக உடன்பாடு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள்,
இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை மீள்குடியமர்த்தல், அதிக அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad