புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு! தொடர்ந்து முன்னிலை

 ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதற்காக, வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
சற்றுமுன்னர் முடிவடைந்த 17 வது சுற்று எண்ணிக்கையில் கட்சிகளின் நிலை வருமாறு

அ.தி.மு.க. - 1,11,088
தி.மு.க. - 41,626

பா.ஜ.க. - 3,811

சி.பி.எம். - 1104
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இன்று காலை முதலே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று தனது முதல்வர் மற்றும் ஶ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதையடுத்து ஶ்ரீரங்கம் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருச்சி-மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வளர்மதி, பா.ஜ.க சார்பில் பொறியாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சுயேச்சைகள் என மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
இதில், மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரில், 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர்.  இந்த தேர்தலில் 81.83 சதவிகித வாக்குகள் பதிவாகியது.
வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ad

ad