புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

எல்லாமாக 1100 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே மேற்கூறிய கிராமசேவையாளர்கள் பிரிவுகளிலும் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு



1990 ஆண்டு ஆடி மாதம் 17ம் திகதியன்று பலவந்தமாக குடியிருந்த வீடுகளிலிருந்து திட்டமிடப்பட்டு கபடத்தனமாக
ஹெலிகாப்டர்களிலிருந்து துண்டுப்பிரசுரம் போடப்பட்டு வெளியேற்றப்பட்டு கடந்த 25 வருடங்களாக இன்றுவரை ஊர்ஊராக வீடுவீடாக மாறி வாடகைக்கும் முகாம்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் 10000 குடும்பங்களுக்கு மேற்பட்ட மக்களும் 7000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகளும் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது அப்படியிருந்தபோதிலும் இப்பொழுது கூட
பளை வீமன்காமம் தெற்கு கிராம சேவையளர் பிரிவு ஜே ( J ) 237,
வறுத்தலைவிளான் கிராமசேவையாளர் பிரிவு ஜே (J) 241 இரண்டிலும்
400 ஏக்கர் நிலப்பரப்பும் ,
கட்டுவன் கிராமசேவையாளர் பிரிவு ஜே (J) 238,
குரும்பசிட்டி கிராமசேவையாளர் பிரிவு ஜே ( J) 242 இரண்டிலும்
300 ஏக்கர் நிலப்பரப்பும்,
வசாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு ஜே (J) 244 இல்
200 ஏக்கர் நிலப்பரப்பும்,
வளலாய் கிராமசேவையாளர் பிரிவு ஜே (J) 284 இல்
200 ஏக்கர் நிலப்பரப்பும்
எல்லாமாக 1100 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே மேற்கூறிய கிராமசேவையாளர்கள் பிரிவுகளிலும் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு நடைபெறவுள்ளதாக அறியக்கிடக்கின்றது

ad

ad