புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

ஒரு பந்து 11 ஓட்டம்

உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  சனிக்கிழமைப் போட்டி மிட்சல் ஜோன்சனுக்கு ( ஆஸி.) பெரும் சோகமாக அமைந்தது.
“நோ போலாக” வீசப்பட்ட இவரது முதல் பந்தில் குப்தில் பவுண்டரி (1+4 ஓட்டம்) அடித்தார்.
“ ப்ரீ ஹிட்”டாக மறுபடியும் வீசப்பட்ட முதல் பந்தில் குப்தில் சிக்ஸர் அடிக்க ஜோன்சனின் முதல் பந்தில் 11 ஓட்டம் எடுக்கப்பட்டது.

தான் வீசிய 6 ஓவரில் 68 ஓட்டங்கள் கொடுத்த ஜோன்சனின் எக்கானமி ரேட் 11.33 ஓட்டங்களாக இருந்தது. இவரது ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுதான் மோசமான பந்துவீச்சு.


26 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் 


இந்தப் போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள்  எடுத்து வலுவான நிலையில்  இருந்தது. பின் பவுல்ட் பந்துவீச்சில் தடுமாறி அடுத்த 26 ஓட்டங்கள் ( 9 விக்கெட்டுக்கு 106 ஓட்டங்கள்) எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.


வேகத்தில் மிரட்டிய நியூஸிலாந்தின் டிரண்ட் பவுல்ட் 10 ஓவரில் 27 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

இதற்கு முன் இத்தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் 10 ஓவரில் 44 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்தியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

ad

ad