புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

13 அதற்கு அப்பால் செல்வதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு: மோடி வலியுறுத்தல்- மோடி வருகை பெரும் ஆசீர்வாதம்: மைத்திரி



இலங்கையின் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்கவேண்டும் என்று இந்திய பிரதமர் கோரியுள்ளார்
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தி;த்த பின்னர் கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்தபோதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையை விடுத்தார்.
13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பால் சென்று செயற்படுவதன் மூலமே ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கமுடியும் என்றும் அவர் கூறினார்
இதேவேளை திருகோணமலையை பெற்றோலிய கேந்திர நிலையமாக மாற்ற இந்திய உதவியளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்
எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு இந்தியாவில் வருகைக்கு பின் விசா அனுமதி வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்
இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1.5பில்லியன் டொலர் என்ற தொகைக்கான நாணய பரிமாற்ற வசதி தொடர்பான உடன்படிக்கையும் இன்று இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மோடியின் விஜயம் இலங்கை மக்களுக்கு கிடைத்த பெரும் ஆசீர்வாதம்: மைத்திரி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயமானது, இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நிகழ்விற்கு முன்னர், உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பௌத்தம் மற்றும் இந்து மாதங்களினால் பிணைந்துள்ளன.
இரண்டு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்புகள் ஊடாக பொருளாதார, கலாசார மற்றும் ஏனைய துறைகளின் முன்னேற்றத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில்; இலங்கையை வந்தடைந்தார் 
அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.
கொழும்பில் இன்று அவர் முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

ad

ad