புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 182 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி


உலகக் கிண்ணப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பெர்த் நகரில் நடந்து வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4.5 ஓவர்களில் 8 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சாமுவேல்ஸ் கெயிலுடன் இணைந்தார். ஆனால் சாமுவேல்சும் நீடிக்கவில்லை. 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். .அடுத்து கெயில் 21 ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்தில் மோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கெயிலை தொடர்ந்து வந்த ராம்தீன் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிம்மன்சும் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரஸ்சல், டாரன் ஷமி ஜோடி ஓரளவுக்கு இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியது. எனினும் ரன்களை வேகமாக எடுக்க முடியவில்லை. டாரன் சமி, முகமது ஷமி பந்துவீச்சில் டோனியிடம் பிடிகொடுத்தார்.
ரஸ்சல் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஜேசன்ஹோல்டர் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக மறுமுனையில் ஜெரோம் டெய்லர் இணைந்தார்.
ஜேசன் ஹோல்டர் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். 56 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மூன்று சிக்சர்களுடன் ஜேசன் ஹோல்டர் அரைசதமடித்தார். ஜெரோம் டெய்லர் 11 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் காட்டன் போல்டானார்.
இறுதியில் 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அவ்வணியின் சார்பில் அதிகபடியாக ஜேசன் ஹோல்டன் 57 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ரவீந்தர ஜடஜா தலா இரு விக்கெட்டுகளையும் அஸ்வின், மோகித் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ad

ad