புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

2 ரன்னில் தப்பியது இந்திய சாதனை


லகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 411 ரன்களை குவித்தது. இதனால்
கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணி பெர்முடா அணிக்கு எதிராக படைத்திருந்த சாதனை 2 ரன்களில் தப்பியது.
கான்பெர்ரா நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.தென்ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் ஆம்லா மற்றும் டி காக் ஆகியோர் களமிறங்கினர். டி காக் வழக்கம் போல் ஒரு ரன்னில் வெளியேறி விட்டார்
.டுப்லசிஸ் ஆம்லாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்து ரன்களை குவித்தது. ஆம்லா 100 பந்துகளிலும் சதமடித்தார். டுப்லசிஸ் 103 பந்தகளிலும் சதத்தை கடந்தார். ஒரு கட்டத்தில் 11 ஓவர்கள் இருந்த நிலையில் ஹாசிம் ஆம்லா 159 ரன்கள் எடுத்த ஆடிக் கொண்டிருந்தார்.
இதே நிலை நீடித்தால் ஆம்லா உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ( 215) கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் மெக்பிரைன் பந்தில் எட்ஜாய்சிடம் பிடிகொடுத்து சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஆம்லா கோட்டை விட்டார். 
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் வானவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 8 பந்துகளில் 24 ரன்களை எடுத்து வெளியேறியதால் அயர்லாந்து அணி தப்பித்ததது. டுப்லெசிஸ் 109 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரூசவ்,மில்லர் ஜோடியும் அயர்லாந்து பந்துவீச்சை விரட்டியடித்து ரன்களை குவித்தது. ரூசவ் 30 பந்துகளில் 61 ரன்களும் மில்லர் 23 பந்துகளில் 46 ரன்களும் குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 411 ரன்கள் எடுத்தது.
இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி எடுத்த  413 ரன்கள்தான் உலகக் கோப்பையில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன் ஆகும்.
அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென்ஆப்ரிக்க அணி 201 ரன்களில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை ஈட்டியது.

ad

ad