புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்


ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
டயகம இரண்டாம் டிவிசன் மோர்வெளி தோட்ட நியூபோர்ட்மோர் டிவிசனில் நேற்று நடைபெற்ற தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றுகையில்,
இன்று மக்களுக்கு தேவையான மிக முக்கியமான வேலைத்திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்தவுள்ளோம். தற்போதைய நிலையில் மலையக மக்களுக்கு வீடு இல்லாத பிரச்சினையே மிக முக்கியமான பிரச்சினையாகும்.
கடந்த காலங்களில் இப்பிரச்சினை இழுப்பறியாக இருந்துள்ளது. பல மலையக அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்ததோடு தடையாக இருந்தார்கள்.
என்னை பொறுத்தவரையில் மலையக மக்கள் எங்களுடைய கோரிக்கைக்காகவே இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளீர்கள். எங்களை நம்பி இருப்பவருக்கு தொழிற்சங்க பேதமின்றி செயல்படுவோம் என இதன்போது இவர் தெரிவித்தார்.
ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டிற்கு சகல அடிப்படை வசதிகளையும் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் மக்களுக்காக இவ்வீடுகள் இலவசாமாக கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் கருத்து தெரிவிக்கையில்,
200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற சரித்திரத்தை இப்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றுகையில்,
அதன் அடிப்படையில் எமது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக மலையகத்தில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகின்றது. இவ்வாறு வழங்கப்படும் 7 பேச்சர்ஸ் காணிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயரில் வழங்கப்படவுள்ளதுடன், அந்த உறுதிப்பத்திரங்களை வங்கியில் அடகு வைத்து பணத்தினை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தமது அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட பின்னர் லயன் வீட்டு திட்டங்கள் அழிக்கப்படும் மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்க சிலர் முயற்சித்து வருகின்றார்கள் அது எதிர்வரும் தேர்தலை குழப்புவதற்கான செயல். அவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தோட்டத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு மட்டும் தான் இதுவரை காணிகள் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தற்போது எங்களது புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் படி தோட்டங்களில் பிறந்து வளர்ந்து வெளியே சென்று வேலை செய்கின்றவர்களுக்கும் காணி வழங்கப்படும்.
அத்தோடு தோட்ட உத்தியோகஸ்த்தர்களுக்கும் தோட்டங்களில் காணி வழங்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணியில் தனி வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
7 பேர்ச் காணியில் தனி வீட்டமைப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு கடிவாளமாக பெருந்தோட்ட மனிதவள நிதியம் விளங்கியது. அத்தோடு வட மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் கடந்த கால அரசின் கடிவாளம் காணப்பட்டது. இந்நிலையில் இவ்விரு கடிவாளங்களும் இன்று தகர்த்தப்பட்டுள்ளன.
அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கான வீட்மைப்பு திட்டமும் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும். நாட்டின் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விஜலை ஓரளவு குறைந்துள்ளது. ஏற்பட்டிருந்த துர்பாக்கியமான ஆட்சி இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சொந்த தேவைக்காக நாட்டு மக்களின் சொத்தை எடுத்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்தார்கள். அவ்வாறான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மலையக மக்கள் அதிகமான பங்கை கொடுத்துள்ளீர்கள். அத்தோடு இந்த மலையக பகுதியில் உள்ள 20 பாடசாலைகளை உயர் தர விஞ்ஞான வகுப்புகள் கொண்ட பாடசாலையாக உயர்த்துவதற்கு அமைச்சு இன்று நடவடிக்கை எடுத்துருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் ஒன்று முதல் ஜந்து வரை கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு கொடுப்பதற்கு இந்த புதிய அரசாங்கம் திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது என்றார்.

ad

ad