புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வீடியோ இணைப்பு)



உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானை சந்தித்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ‘தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன் படி பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமது, அகமது ஷேசாத் ஜோடி சற்று ஆறுதலான தொடக்கம் தந்தது. அகமது ஷேசாத் (18) ஸ்டைனின் அசத்தலான பிடியெடுப்பில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து சர்பராஸ் அகமது (49) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
யூனிஸ் கான் 44 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்த போது, தேவையில்லாமல் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி சிக்கலில் சிக்கியது.
அடுத்து வந்த மக்சூட் (8), உமர் அக்மல் (13) நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 37 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் எடுத்த போது, பலத்த மழை பெய்ததால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் 27 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி தொடங்கியது. பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த மிஸ்பா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் அரங்கில் 42வது அரைசதம் எட்டினார்.
40.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 197 ஓட்டங்கள் எடுத்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. 46 நிமிடத்துக்குப் பின் போட்டி தொடங்கிய போதும், 3 ஓவர்கள் மட்டும் குறைக்கப்பட்டது.
ஸ்டெயின் பந்தை சிக்சர் அடித்த அப்ரிதி, அடுத்த பந்தில் அவரிடமே ஆட்டமிழந்தார். வஹாப் ரியாஸ் வந்த வேகத்தில் ‘டக்’ அவுட்டானார்.
நீண்ட நேரம் போராடிய மிஸ்பா 56 ஓட்டங்களில் நடையை கட்டினார். ரகாத் அலியும் (1) ஸ்டெயின் வேகத்தில் சிக்கினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 222 ஓட்டங்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 3, அபாட், மார்கல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் டக்- அவுட் ஆக வெளியேறினார்.
அசத்தலாக விளையாடிய ஆம்லா (38), டுபிளசி (27) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ரூசொவும் (6) சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினார். மில்லர் டக்-அவுட் ஆக ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டிவில்லியர்ஸ் அணியை வெற்றி பெற வைக்க பொறுமையை கையாண்டார். 77 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா இக்கட்டான நிலையில் சிக்கியது.
அடுத்து வருபவர்கள் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டு வெற்றி பாதையை நோக்கி அழைத்து செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டுமினி (12), ஸ்டெயின் (16), அபாட் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளினர்.
இதைத் தொடர்ந்து போராடிய டிவில்லியர்ஸ் அதிரடியை ஆரம்பித்தார். இதனால் 77 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனையடுத்து இம்ரான் தாகிர் டக்-அவுட் ஆக, மார்கல் (6) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரிகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதைத் தொடர்ந்து 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில், முகமது இப்ரான், ராஹட் அலி, வஹாப் ரியாஸ் தலா 3, சொகலி கான் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சர்ப்ராஸ் அகமது  ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad