புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



 யூசிலாந்து-வங்காள தேசத்திற்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் மெக்முதுல்லா சதத்தால் 288 ரன்கள் குவித்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 

நியூசிலாந்து அணியின் குப்தில் சிறப்பாக விளையாடி 105 ரன்களும், தன் பங்கிற்கு டெய்லர் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஆண்டர்சன் 39 ரன் எடுத்தார்.

வங்காள தேச அணியின் தரப்பில் சாகிப் அல்ஹஸன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ad

ad