புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? ...கொழும்பு பிரதான நீதவான்

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு
கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடற்படை உத்தியோகத்தர்களினால் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கோத்தபாய முகாமில் தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
 கிஹான் பிலபிட்டிய, புலனாய்வு பிரிவினருக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணைப் பிரிவினால் நீதிமன்றில் சாட்சியமளித்த போது தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவொன்றின் விசாரணைகளின் போது இளைஞர்கள் காணாமல் போன விடயம் அம்பலமானது.
முகாமில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நீதவான் அறிவித்துள்ளார்.
கோத்தபாய முகாமை தாமே நிறுவியதாக கடற்படையின் சட்டப் பிரிவு பணிப்பாளர் வீரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad