புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

62-வது தேசிய விருதுகள் அறிவிப்பு




மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது.  அதன்படி 62வது தேசிய விருதுகள், அதாவது 2014ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படமாக தமிழில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு கிடைத்துள்ளது. 

தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக ‘கோர்ட்’ என்ற மராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.   

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு கிடைத்துள்ளது.  

காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், ரமேஷ் ஆகியோருக்கு குழந்தை நட்சத்திர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

சைவம் படத்தில் ’’அழகே... அழகே...’’ பாடல் எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

ad

ad