புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

சிறுமிகள் பலாத்காரம்; 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகள்; புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு


சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் 8 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ், அவர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி, தலைமறைவாகி உள்ள 6 போலீசாரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தார். குற்றவாளிகள் குறித்து உரிய தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் அளித்தவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். தலைமறைவாகி உள்ள போலீசாரிடம், காவல்துறையினர் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி போலீஸாரும் அவர்களை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது.

சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.

இதில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 6 பேரையும் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், அவர்களது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பினை எஸ்பி வெங்கடசாமி வெளியிட்டார்.

ad

ad