புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

உலகக் கிண்ண இறுதிப் போட்டியை உறுதி செய்ய அவுஸ்திரேலியா - இந்தியா இன்று பலப்பரீட்சை

அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் இலங்கை நேரப்படி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அவுஸ்தி ரேலியாவில் பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகும். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான முதல் அணியாக நிய+ஸிலாந்து அணி தென் னாபிரிக்காவை வீPழ்த்தி முதற்தடவை யாக அரையிறுதியில் வெற்றி பெற்று தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியை பொறுத்தவரை இரு அணி வீரர்களும் துடுப்பாட்டம் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாக காணப்படுகின்றனர். அவுஸ் திரேலிய அணி தனது சொந்த மண்ணில் அது மட்டுமல்ல தங்களது ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்திய அணியை எதிர் கொள்கின்றமை விசேட அம்சமாகும். இரண்டு அணிகளும் முதன் முறையாக அரையிறுதிப்போட்டியில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக சிட்னி மைதானத்தில் ஜனவரி 26ம் திகதி மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த மைதானத்தில் இந்திய அணி 4 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டியில் தோற்றுள்ளது
இதேவேளை இந்திய அணி 2003 ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத் தக்கது.அவுஸ்திரேலிய அணி 2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்திய அணி யிடம் தோல்வியடைந்தது. அவுஸ் திரேலிய அணியின் N'ன் வொட்சன் மாத்திரம் உலக கிண்ணப் போட்டியில் 500 ஓட்டங்களை கடந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக வட்சன், கிளார்க், மெக்ஸ்வெல் டேவிட் வோனர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சோபித்து வருகின்றனர்.பந்து வீச்சை பொறுத்தவரையும் அந்த அணிக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கும் வகையில் மிச்சல் ஸ்டார்க் உள்ளமை குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலிய அணியின் மற்ற மொரு பந்து வீச்சாளர் ஜோன்ஸன் எதிரணி வீரர்களுக்கு சவாலாக இருப் பாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏன் என்றால் அவர் இந்த சுற்றுப்போட்டியில் சொல்லும் அளவுக்கு பந்து வீச்சில் பிரகாசிக்க வில்லை. ஜோன்ஸன் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத் தமை குறிப்பிடத்தக்கது இந்திய அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் நல்ல நிலையில் இருந் தாலும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அவுஸ் திரேலிய மண்ணில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் டோனி, ரோஹித் சர்மா, கோஹ்லி, தவான் ஆகியோர் எதிரணி பந்து வீச்சுக்கு முகம் கொடுத்து சிறப்பாக ஆடி அவ் வணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வார்கள் என்று எதிர்பார்க் கலாம் பந்து வீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ஏனைய பகுதி நேர பந்து வீச்சா ளர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருப் பார்கள். இரு அணிகளும் 117 ஆட்டங்களில் மோதி யுள்ளன.
அவுஸ்திரேலிய அணி 67 போட்டிகளில் வெற்றியும் 40 போட்டி களில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்திய அணி 40 போட் டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் அடைந் துள்ளது. 10 போட்டிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது இதுவரை இரண்டு அணிகளும் 10 உலக கிண்ணப் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் அவுஸ்திரேலிய அணி 7 போட்டிகளிலும் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சம்பியன் இந்தியாவா அல்லது அவுஸ் திரேலிய அணியா நிய+ஸிலாந்து அணியுடன் 29ம் திகதி மெல்பேன் மைதானத்தில் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
சிட்னி மைதானப்பகுதியில் நேற்று மாலைவரை மழை பெய்ய வில்லை இன்று காலநிலை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாதுள்ளது. இங்கு முக்கிய அம்சம் என்னவென்றால் 23 வருடங்களாக இறுதிப் போட்டிக்கு ஆசிய அணிகள் தெரிவாகும் சாதனையை இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் இந்திய தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது போட்டியை நடத்தும் இரண்டு நாடுகளும் இறுதிப்போட்டியில் மோதுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ad

ad