புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

உலகக் கோப்பை கிரிக்கெட் - காலிறுதியில் இந்தியா




உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. பி பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணி இந்தியா. லீக் சுற்றில் இன்னும் 2 ஆட்டம் எஞ்சி உள்ள நிலையில் காலிறதிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றது. இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், வெள்ளிக்கிழமை நடந்த 4வது ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகளை வென்றது இந்திய அணி. மேற்கு இந்திய தீவுகளை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

முதலில் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 44.2 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. 39.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்திய அணி கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

ரோகித் சர்மா 7, தவான் 9, கோலி 33, ரகானே 14, ரெய்னா 22, ஜடேஜா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ad

ad