புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட மீள்குடியேற்றம்; நாளை மறுதினம் சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி


கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள்
மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் ஹரின் பிரிஸ் தெரிவித்தார்.

 
மீள்குடியேற்றம்  தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. அதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளர்களிடம்  கருத்துத்தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில், 
 
மீள்குடியேற்றம் முதற்கட்டமாக வலி.கிழக்கு வளலாயில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி  272 குடும்பங்கள்  232 ஏக்கர் நிலப்பகுதியில் குடியமரத்தப்படவுள்ளனர். 
 
எனவே அதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தும் பொருட்டு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோப்பாய் பிரதேச செயலர் ஊடாக நிலச்சொந்தக்காரர்களை அழைத்துச் சென்று தங்களுடைய காணிகளை அடையாளப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

 
மேலும் இம்மாத இறுதிக்குள்  வளலாயில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். அத்துடன்  தொடர்ச்சியாக 1000 ஏக்கர் நிலவிடுவிப்பும் அதில் 1853 குடும்பங்களும் மீள்குடியேற்றம்  செய்யப்படவுள்ளனர். 
 
முதல்கட்டம் வளலாயிலும் தொடர்ச்சியாக 1000 ஏக்கரும் விடுவிக்கப்படும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad