புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு


 தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு
நிகராக அபிவிருத்தி அடையும். அதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண போக்கு வரத்து அமைச்சர் பா.டெனீஸ் வரன் தெரிவித்தார்.
மத்திய அரசால் வடக்கு மாகாண மக்களின் போக்குவரத்தை மேம் படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த சனிக்கிழமை வன்னி மாவட்ட போக்குவரத்துச் சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இன்று வட மாகாணத்தில் போக்கு வரத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சாலைக்கும், தனியார் பஸ் சங்கங்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் காணப் படுகின்றன.  போக்குவரத்து அட்ட வணை தயாரிப்பதில் இருந்து வீதிகளில் பிரயாணிகளை ஏற்றி இறக்குவது வரை போட்டி நிலையே காணப்படுகின்றது. 
 
  இவ்வாறான செயல்கள் தொடரும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொண்டு  தண்டனைக்கு உட்படுத்து வதனூடாகவே இவற்றைக் கட்டுப் படுத்த முடியும். என்றும் அவர் தெரிவித்தார்.
 
எமது தமிழ் மக்களது உரிமை தொடர்பாக இந்த அரசு உரிய கவனமெடுத்து தீர்வு காணுமா னால் எமது நாடு துரிதகதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அபிவிருத்தி அடையும் என்பதில் எந்தவித  ஐயப்பாடுமில்லை.  இனங்க ளுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டி யயழுப்புவதன் ஊடாக  எமது நாட்டை கட்டியயழுப்புவோம். என்றும் அவர் தெரிவித்தார்.  

ad

ad