புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா அறிவிப்பு


ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிbழ விடு தலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள் ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, க
டந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல், விடுதலைப் புலிகளின் தடையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நீதிமன்றம் இத்தடையை நீக்கியிருந்தமை கடந்த கால அரசின் இராஜ தந்திரக் கொள்கையின் பலவீனம் எனச் சுட்டிக்காட்டிய அஜித் பெரேரா, எதிர்க்கட்சித் தலைவராக அப்போது பதவி வகித்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இத்தடையை நீடிப்பதற்கு மீள்பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை எழுத்து மூலம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பானது இலங்கை அரசுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என்று பிரதியமைச்சர் பெரேரா குறிப்பிட்டுள்ளார்

ad

ad