புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

தேசிய அரசுக்குள் குழப்பம்; நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை

 நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கடந்தவாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய
அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்களிடையே கருத்து மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக அரச உயர்மட்டத் தகவல்களுடாக அறியமுடிகின்றது.
 
தேசிய அரசை அடிப்படையாகக் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மேற்படி இரு பிரதான கட்சிகளும் மேற்கொண்டுவரும் இரகசிய காய்நகர்த்தல்களே இந்த பணிப்போருக்கு கரணமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
 
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்குதல் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பான அரசமைப்பு திருத்தம் குறித்து தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக யஹல உறுமய முதலான கட்சிகளுக்கிடையில் பரஸ்பர கருத்து மோதல்கள் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்றன.
 
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், பிரதமரின் அதிகாரத்தின் கீழான அமைச்சரவை நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நீக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜாதிக யஹல உறுமயவும் உள்ளன. 
 
மேலும், ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறித்து பிரதமரின் கரங்களைப் பலப்படுத்த முடியாது என்றும் யஹல உறுமய வலியுறுத்திவருகின்றது.
 
இந்நிலையில், தேசிய அரசினூடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும், அடுத்த தேர்தலை இலக்கு வைத்தும், தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்துமே இருவரும் செயற்பட்டு வருகின்றன என ஏனைய அரசியல் கட்சிகளும், அரசியல் ஆய்வாளர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
 
மேலும், தேசிய அரசை உருவாக்குவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 26 எம்.பிக்களுக்கு அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமை குறித்தும் அதில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 8 ஆம் திகதி உருவாக்கப்பட்ட அரசில் ஐ.தே.கவினருக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களிலிருந்து ஒரு சிலவற்றைப் பறித்தெடுத்துதான் சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுகளை தம்முடன் கலந்துரையாடமலேயே பறிக்கப்பட்டுள்ளது என்றும் சில அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ தலைமையிலான கடந்த அரசில் ஊழல், மோடிகளில் ஈடுபட்டவர்கள் எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களுக்கும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்த்தரப்பினரை கடுமையாக விமர்சித்தவர்களுக்கும் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிலர் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது தம்மை கடுமையாக விமர்சனம் செய்தவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரச உயர்மட்டத்திடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
 
தேசிய அரசில் ஏற்பட்டு குழப்பநிலையை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி, குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் தெரியவருகின்றது.

ad

ad