புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

மனைவியை நல்லபடியா பார்த்துக்கோ! மணமகனுக்கு பன்னீர் அட்வைஸ்


ன்னீர் பராக்!
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தன் சொந்த ஊரில் 104 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.

அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அந்த இலவசத் திருமண நிகழ்ச்சிக்காக, கடந்த சனிக்கிழமை பெரியகுளத்துக்கு வந்தார் பன்னீர்.
பன்னீர் வருகையை எதிர்பார்த்து, பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில், அவரது நண்பர்களும் கட்சிக்காரர்களும் காத்து இருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் வீட்டுக்குள் அழைத்தார். திருமண ஏற்பாடுகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  பிறகு, மாலை ஏழு மணிக்குத்  தன் வீட்டின் அருகிலுள்ள வரதராஜ பெருமாள் சந்நிதிக்குச் சென்று பெருமாளை தரிசித்தார். மீண்டும் வீட்டுக்கு வந்து, அங்கிருந்து கல்யாண மண்டபத்துக்கு இரவு 9.40 மணிக்குச் சென்றார்.
அங்கிருந்த மேடை அமைப்பாளரிடம், '122 ஜோடிகள் உட்கார்வதற்கு இந்த இடம் போதுமா?', என்று கேட்ட பன்னீர், 'கீழே இருந்து பார்ப்பவர்களுக்கு மேடை முழுவதுமாகத் தெரிவதுபோல இருக்க வேண்டும். இங்கு உட்கார  முடியாதவர்களுக்கு மண்டபத்துக்கு வெளியே பந்தல் போட்டு எல்.இ.டி டி.வி வையுங்கள்' என்று உத்தரவிட்டார்.
இரவு முழுவதும் ஜரூராக வேலைகள் நடந்தன. மறுநாள் காலையில்  தனக்குப் பிடித்த பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கே, அறம் வளர்த்த நாயகி சந்நிதி, ராஜேந்திர சோழீசுவரர் சந்நிதியை வணங்கிவிட்டு, சுப்ரமணிய அலங்காரத்தில் இருந்த முருகனிடம் மட்டும் 20 நிமிடங்கள் கழித்தார். அதன் பிறகு வழக்கமாகச் செல்லும் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு அன்றைய மதியம் கோயிலின் கீழ்ப்பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45-க்கு மீண்டும் மண்டபத்துக்கு வந்தார் முதல்வர். ஆறு வரிசைகளில் வரிசைக்கு ஒன்பது ஜோடிகள் உட்காருமாறு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதனைப் பார்வையிட்ட பன்னீர், 'இப்படி உட்கார்ந்தா பின்னாடி இருக்குற அம்மா படம் தெரியாது. அதனால கடைசி வரிசை சேரை எடுத்து முன்னால போடுங்க. எல்லா நிர்வாகிகளும் வாங்க. ஆளுக்கு ரெண்டு சேரா எடுத்து போடுங்க. அலங்காரமெல்லாம் ஓகே. இதை மட்டும் கொஞ்சம் சரிபண்ணுங்க’ என்றார். அமைச்சர் உதயகுமாரும் அங்கே வந்திருந்தார். அங்கிருந்த சாம்பிள் சீர்வரிசைகளைப் பார்வையிட்டு, ஜெயலலிதா படம் ஒட்டப்படாமல் இருந்த பொருட்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு விரைவாக ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என்று கட்டளையிட்டார்.
122 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், பல்வேறு வகைகளில் ஜெயலலிதாவுக்கு நல்லது என்று சோதிடர்கள் சொன்னதை அடுத்து ஒரே வாரத்தில் எல்லா ஏற்படுகளையும் செய்தார் முதல்வர்.  கல்யாண தேதி குறிக்கப்பட்ட உடனே மணமக்களைத் தேடும் பணி அவசரமாக நடைபெற்றது. பத்திரிகை விளம்பரம் கொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் கட்சிப் பிரமுகர்கள் மூலமும் மணமக்கள் தேடும் படலம் நடந்தது. கடைசியாக, அ.தி.மு.க இளம்பெண்கள் பாசறையில் இருந்து திருமணம் ஆகாத ஒரு சில நபர்களை மணமக்களாகத்  தேர்வு செய்தனர்.   அப்படியும்கூட, அவர்களால் 122 ஜோடிகளைப் பிடிக்க முடியவில்லை. 104 ஜோடிகள் மட்டுமே கலந்துகொண்டனர். அதிலும் சில ஜோடிகள் ஏற்கெனவே திருமணம் நிச்சயமான ஜோடிகள் மாதிரி தெரிந்தார்கள்.
104 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. குத்துவிளக்கு, குக்கர், பால் குக்கர், சட்டி பானை, குட்டி பீரோ, மின்விசிறி என்று 67 சீர்வரிசைப் பொருட்கள் ஒவ்வொரு ஜோடிக்கும் கொடுக்கப்பட்டன. இந்தத் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேடைக்குக் கீழே இருந்து பார்த்துக்கொண்டிருந்தார், முதல்வரின்  மனைவி விஜயலட்சுமி.
உணவு அறைக்குச் சென்ற பன்னீர்செல்வம், மணமக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார். அவருக்கு அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு ஜோடியிடம், 'நல்லா சாப்பிடுங்க...' என்று சொன்ன பன்னீர், மணமகனைப் பார்த்து, 'மனைவியை நல்லபடியாகப் பார்த்துக்கப்பா...' என்று அட்வைஸ் செய்தார்.
ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை!

ad

ad