புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2015

கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!




கார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தப் படத்தை வெளியிட்டால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்படும் என்றும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும்மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு படத்தை போட்டுக்காட்ட உத்தரவிட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை படம் போட்டுக்காட்டப்பட்டது.

அதில் ஒரு நீதிபதி ஆட்சேபம் தெரிவித்து வெளியேறினார். ஒரு நீதிபதி அறிக்கை கொடுத்திருந்தார். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைதொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நடந்தது. விசாரணையின் போது கிருஷ்ணசாமி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கிய வாதங்கள், 5.45 மணி வரை நீடித்தது

ad

ad