புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

ஒயில் கசிக்கு தீர்வுகாண நோர்வே முழு ஆதரவையும் வழங்கும்; சுற்றுச்சூழல் அமைச்சர்


நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக
உறுதியளித்துள்ளனர் என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கான நோர்வே தூதுவர் க்ரேட் லொஷேன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு வடக்கு முதல்வர் உள்ளிட்ட பலரைச் சந்தித்து கலந்து பேச்சுக்களை நடாத்தியிருந்தார். 
 
சுற்றுச்சூழல் அமைச்சருக்கும்  தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்குபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

ad

ad