புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

கணவர் தியாகு வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!




போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தாமரையிடம் வருத்தம் தெரிவித்தார் தியாகு. தாமரையிடம் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தையும் அளித்து, உடல்நலம் கருதி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தியாகு கூறினார். விசாரணைக்கு குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தியாகு உறுதி அளித்துள்ளார். விசாரணை குழுவின் முடிவை தாம் ஏற்கத் தயார் என்றும் தாமரை கூறியுள்ளார்.

தமது கணவரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு, தம்மையும் தனது மகனையும் தவிக்கவிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேவிட்டார் என்றும், தியாகுவின் செயலை கண்டித்தும், கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார் கவிஞர் தாமரை. 

தாமரையிடம் வருத்தம் தெரிவிப்பதாக மின்னஞ்சல் மூலமாக தியாகு கடிதம் அனுப்பினார். அதனை ஏற்க தாமரை மறுத்தார். இதையடுத்து தாமரை போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதிக்கு வந்த தியாகு, அவரிடம் வருத்தம் தெரிவித்தார். 

உடல்நலன் கருதி, வீட்டிற்குச் செல்லும்படி அறிவுறுத்தினார். மேலும், தனது செயல்பாடுகள் குறித்து ஆராய அமைக்கப்படும் விசாரணைக்குழுவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தியாகு தெரிவித்தார். இதையடுத்து தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தாமரை அறிவித்தார்

ad

ad