புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்


பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கிடையில் கடந்த 17ம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி நடத்தி ஜுன் மாதம் 27ம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தின் முடிவில் ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தலாம் என ஜனாதிபதி யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதினால் வெசாக் பண்டிகையின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் மே மாதம் 5ம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 27ம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் தற்போது காணப்பட்டு வரும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களினால் பாராளுமன்றம் கலைப்பு மற்றும் தேர்தல்களில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad