புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்
கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முற்போக்கான அரசியல்வாதிகள் சிலர் தமக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை கோரியுள்ளனர்.
இவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், படித்த இளையோர் மற்றும் பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad