புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2015

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.


 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சனைக்கு காரணமாக உள்ள தடைசெய்யப்பட்ட வலைகளை முழமையாக தடுக்க நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து எதிர் வரும் 27ம் திகதி வரை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உளதாக  இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 54 மீனவர்களை 10 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்து சென்று சிறையில் அடைத்தனர். இதனால் இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்களிடையே பெரும் பதட்டம் நிலவியது.
 
இந்நிலையில் இராமேஸ்வரம் துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்க கூட்டம் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளுவது என்றும், மீனவர்கள் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ள இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளுவது கிடையாது.  இதனால் மீன்வளம் அழிவதுடன் இந்திய இலங்கை மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.
 
 
மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறையை கண்டித்து வரும் 27ம் தேதி இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது. இந்த படகுகளை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை மறு தினம் சென்னையில் இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தபட உள்ள நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்த கூட்டத்தில் 11 மீனவ சங்கத்தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் எனவும் 
 
இந்நிலையில் இன்று சிறைபிடிக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரையும் வருகின்ற 27ம் தேதி வரையிலும், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை ஏப்ரல் 2ம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

ad

ad