புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்


சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்தார்.
ஜெனீவாவில்  ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் சில நாடுகளால் அலட்சியம் செய்யப்படுவதுடன், தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சில தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாக சிலர் கூறிக்கொள்வதாகவும் ஹுசைன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் ஐ.நா உறுப்பு நாடுகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு குறித்து சில நாடுகள் காண்பித்த அலட்சியம் மற்றும் அவமதிப்புத் தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள் தன்னிச்சையாக உருவாக்கப்படுபவையல்ல. நாடுகள் தெரிவு செய்யும் கொள்கைகளின் காரணமாகவே மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. சில நாடுகளின் கொள்கைகள் சுதந்திரம் மற்றும் பங்கெடுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைவதாகவும் கூறினார்.

ad

ad