புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிப்பு




 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வேணுகோபாலன் சன்னதியில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அறைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

இதை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அனைத்து உப சன்னதிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ரங்கவிலாச மண்டபத்தின் மேற்கு பகுதியில் கிபி 8ம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கலைநயத்துடன் கட்டப்பட்ட வேணுகோபாலன் சன்னதி உள்ளது. இதை சுற்றி இருந்த மண்ணை 6 அடி அளவுக்கு தோண்டும் பணி நடந்தது.

 அப்போது சன்னதியின் பின்புறத்தில் மண் சுவரும், மண்ணில் புதைந்திருந்த சிற்பங்களும் கண்டறியப்பட்டன.இந்நிலையில், கடந்த வாரம் இங்கு ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை ஆணையர் நரசிம்மன், மைய மண்டபத்தின் வலதுபுறம் வண்ணங்களால் வரையப்பட்டிருந்த தன்வந்தரி பெருமாள் ஓவியத்தை கண்டார். இதையடுத்து பழமைவாய்ந்த அந்த ஓவியம் இருந்த மண் சுவரை துளையிட்டு ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில், நேற்று மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணியின் போது 4 அடி உயரத்தில் இருந்த மண் சுவரை இடித்து அகற்றிய போது உள்ளே 20 அடி நீளம் 5 அடி அகலத்தில் கருங்கல்லான பாதாள அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், அந்த அறையின் தரைப்பகுதியில் சுமார் 2க்கு 2 அடி அளவுள்ள துவாரம் இருந்தது. அதன் வழியாகப் பார்த்த போது, அந்த அறைக்கு கீழேயும் ஒரு பாதாள அறை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இரு அறைகளும் ஒரே அளவில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த  துவாரத்தின் வழியாக ஊழியர்கள் ஏணி மூலம் இறங்கி பார்த்தனர். அங்கு கற்சுவர்களில் பல்வேறு  சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. தகவல் அறிந்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேறு அறைகள் உள்ளனவா என்பது குறித்து மற்றொரு ஓரத்திலும் தோண்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ad

ad