புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. சதம் விளாசிய ரோஹித்: வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)


உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின.
இதில் வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்தியா 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த தோல்வியை வங்கதேச ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. தங்கள் நாட்டு அணிக்கு எதிராக நடுவர்கள் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவின் ரோஹித் சர்மா 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த பந்தை `நோ’பால் என்று நடுவர் அறிவித்துவிட்டார். ஆனால், ரீப்ளேயில் அது சரியான பந்து போன்றுதான் தெரிந்தது.
`நோ’ பால் என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கிரிக்கெட் வாரியம், நடுவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் நடுவர் இவான் கெளல்ட்டும், பாகிஸ்தான் அம்பயர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாகவும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.
போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்மையை வங்கதேச ரசிகர்கள் எரித்தனர்.
இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக ஐ.சி.சி.யே சதி செய்துவிட்டது என்றும், நாங்கள் மோசமான முடிவுக்கு எதிராகவே போராடுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ad

ad