புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2015

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சில வாராந்தப் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கக் கூடாது என்றும், தேர்தல் முறைமையை மாற்றத் தேவை இல்லை எனவும் தாம் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை. அச்செய்தி அடிப்படையற்றது என்றும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இவ்விடயங்கள் தொடர்பாகக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவென தம் அலுவலகத்தில் அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீல.சு.கட்சியின் மத்திய குழு அரசியலமைப்புத் திருத்தத்திற்காக நியமித்துள்ள கமிட்டியின் தலைவர் என்ற வகையில் தாமும் இக்குழுவின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, ஜோன் செனவிரட்ன, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இணைந்து அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக எமது கட்சியின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான வரைவொன்றைத் தயாரித்துள்ளோம்.
குறித்த வரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்
01. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்..
02.  பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம், அமைச்சுக்களுக்கு செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம், ஆகியன நீக்கப்பட வேண்டும்.
03.  ஜனாதிபதி பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களுக்குக் குறைக்கப்பட வேண்டும்.
04.  கட்சி தாவலைக் கடுமையாகத் தடை செய்யும் சரத்து அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
05.  விருப்பு வாக்கின்றி தொகுதிக்குப் பொறுப்புக் கூறக்கூடிய வகையில் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு ஏற்ப கலப்பு தேர்தல் முறைமையை உருவாக்குதல் வேண்டும்.
குறித்த வரைவு ஸ்ரீல.சு.க. மத்திய குழுவின் கலந்துரையாடலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இவ்வரைவு குறித்து தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டுள்ளனர். இதற்கென ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது கருத்துக்களை அறிந்ததும் இறுதி வரைவை வரைந்து கட்சி மத்திய குழுவின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.

ad

ad