புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

என்னிடமிருந்து ஹில்டன் ஹோட்டலை பசில் ராஜபக்ஷ வலுக்கட்டாயமாக பறித்து கொண்டார்: கேர்னல் பெரேரா


சொந்த பணத்தில் நான் கட்டிய ஹில்டன் ஹோட்டலை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பறித்தெடுத்து கொண்டார் என கேர்ணல் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பசிலுக்கு பாராளுமன்றத்தில் அப்போதிருந்த பெரும்பான்மையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்பித்து, ஒரே நாளில் அதை நிறைவேற்றி எனது ஹோட்டலை பறித்து கொண்டார் என கேர்ணல் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
பசிலின் இந் நடவடிக்கைக்கு முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் உடந்தையாக இருந்தார் என்பதை கூறுவதற்கு நான் பயப்படவில்லை.
நீதிமன்றத்தில் கூட எனக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்தும் என் ஹோட்டலை நான் பெற்றுகொள்வதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்கம் மாறியது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
வட, கிழக்கு மற்றும் இலங்கையை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைகளையும், திட்டங்களையும் நான் நன்கு அறிவேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக நிவாரணங்களை பெற்று கொடுப்பார் என கேர்ணல் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை முதலில் செய்து விட்டே அபிவிருத்தி பாதையில் செல்ல வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியாகவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகர திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித்துறைக்கும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கடற்பரப்பில் 100 ஏக்கர் கொடுக்கப்படும் போது நிலப்பரப்பின் அடிப்படையில் எமது நாட்டிற்குதான் நஷ்டம்,
அதுமாத்திரமல்லாது அவர்கள் கப்பலிலோ, நீர்மூழ்கி கப்பல்களிலோ, வீசா இல்லாமல் வந்து செல்பவர்களை யாரால் தடுக்க முடியும் என கேர்ணல் பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.

ad

ad