புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

நான்கு பொலிஸாரின் மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது


இரத்மலான, அங்குலான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொலை செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
அங்குலானை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 4 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 வயதான தினேஷ் தரங்க பெர்னாண்டோ மற்றும் 26 வயதான தனுஷ்க அபோன்சு ஆகிய இளைஞர்களை அங்குலான பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர்களை சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அங்குலானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.டி. நியூட்டன், பொலிஸ் உத்தியோகஸ்தர்களான இந்திரவங்ச குமாரசிறி, தம்மிக்க நிஹால் ஜயரத்ன, ஊர்காவற்படை வீரர் ஜனபிரிய சேனாரத்ன ஆகியோருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்திய தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னக்கோன் குற்றவாளிகள் முன்னிலையில் அறிவித்தார்.

ad

ad