புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

இணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`!


கல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.
பிரபல சினிமா நிறுவனமான  ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில்  இறங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை
திரைப்படமாக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பல காரணங்களால் அவர்களின் முயற்சி ஆரம்ப கட்டத்திலேயே நின்று போயின. தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராகப்  பணியாற்றும் ஈராஸ் நிறுவனம், பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முடிவெடுத்துள்ளது. ஆனால் திரையரங்குகளில் வெளியிடாமல் பல  பகுதிகளாகப் பிரித்து இணையதள திரையில் பதிவேற்றி ரசிகர்களைக் கவர திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஈராஸ் நிறுவனம் "திரைவடிவமாகவோ ,அல்லது  விசிடி வடிவிலோ  அல்லாமல் ஒவ்வொரு பகுதியும் இணையத்தில் பதிவேற்றப்படும். பார்க்க விரும்புபவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் பணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் வரலாற்று பாத்திரங்களைக் கொண்ட நாவல் என்பதால் தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதுவார் என்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஈராஸ் கூறியுள்ளது.இணையதள திரையில் வெளியாகிறது `பொன்னியின் செல்வன்`!

ad

ad