புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை


இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி பாலேந்திரன் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டப்பட்டு ஜெயக்குமாரி  கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஜெயக்குமாரி ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதவான் விடுதலை செய்ததுடன், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
வெளிநாடு செல்ல ஜெயக்குமாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பத்மவாதி மகாலிங்கம் என்ற பெண் உள்ளிட்ட மேலும் எட்டு பேர் கடுமையான நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad