புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

பிரித்தானியாவில் நடைபெற்ற “நினைவுகளும் கனவுகளும்” நூல் அறிமுக விழா..!


nool-034











நினைவுகளும் கனவுகளும் நூல் அறிமுகவிழா -14-02-15 ஐக்கியராட்சியம்…
பிரித்தானிய- புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும்
, முன்னாள் கிராம முன்னேற்ற சங்க தலைவருமான வே.சு. கருணாகரன் அவர்கள் எழுதிய “நினைவுகளும் – கனவுகளும்” நூல் அறிமுக விழா 14-02-2015 அன்று ஹரொவ் ஐயப்பன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லேபர் கட்சியின் ஹரொவ் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் செல்வி. உமா குமரன் மற்றும் லிபரல் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர் திரு. சொக்கலிங்கம்
யோகலிங்கம் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர் நேமிநாதன் தலைமை வகிக்க வரவேற்பு உரையினை சோதிகலா மோகனகுமாரன் நிகழ்த்தினார். >>>>
ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, விரிவுரையாளர் சிவபாலன், ஆகியோர் நூல் ஆய்வுரையினை வழங்கியிருந்தனர்.
எழுத்தாளர் தமிழரசி நூல் மதிப்பீட்டுரையினை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் பாலகணேசன் சிறப்புரை நிகழ்த்தினார்.
பிரித்தானிய – புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் தலைவர் கதிரவேலு கங்காகுமரன் முதல் பிரதியினை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதிதலைவர் பிரேம் சிவசாமி அவர்களால் சூழகம் அமைப்பின் உத்தியோகபூர்வ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சூழகம் அமைப்பின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர் குபேரன் தர்மராஜா நல்லதம்பி மற்றும் பிரித்தானியா – புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் பொருளாளர் சொக்கலிங்கம் கருணலிங்கம் ஆகியோரால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
**********************************************************
எனக்கு சொல் கொடுத்து வளர்த்துவிட்ட என் பெற்றோருக்கும், எங்கு சென்றாலும் கற்றதை கொண்டு நீ நல்லவனாய் வாழ வேண்டும் என வாழ்த்திய என் ஆசிரிய ஆசிரியை பெருந்தகைகளுக்கும், எல்லாமாய் வழிநடத்தும் என் இறைவனுக்கும் இங்கு கூடிநிற்கும் என் பெரியோர்க்கும் எனதருமை மக்களுக்கும்,
என் முதற்கண் வணக்கங்கள்.
செல்லரித்து போனதடா எம் மரங்களையும் மனங்களையும்
செல் அரித்தும் போனதுபார் எம் மண்ணையும் மக்களையும்
முறிந்த மரங்கள் பாதி, முகடு தெறித்த எம் பனைகள் பாதி,
நீர் இன்றி இனி நிற்கமாட்டோம் என இறந்தவை பாதி,
சொல் அரித்த என் மனதில் இருந்து சொல்லுகின்றேன் நன்றி.
முறிந்த முற்றத்து மல்லிகைகள், பூக்க மறுக்கும் பூவரசு,
மஞ்சவண்ணா,வேம்பு, ஆல், அரசு…
ஏன் குப்பைமேனி கூட, எம்மை குளிர்வித்தவை தான்.
வாருங்கள் காப்போம்
எமக்கு இல்லை எனினும், எமது பேரன் பூட்டனாவது
போய் பார்க்கட்டும் – எம்
மண் எத்தனை செழிப்பென்று.
சூழகத்தை சுற்றி கை கோர்க்கும் என்
உறவுகளே உங்களுக்கு என் நன்றிகள்.
குளிர்காலம், காதலர் தினம், விடுமுறை நாள் வீட்டினில் வேலைகள் எல்லாம் எமக்காக தள்ளி வைத்து விழா சிறக்கவேனும் என தலைமை தாங்கி பல ஆக்கபூர்வ கருத்துக்களை எமக்கு தந்து வழி காட்டிய ஐயா நேமிநாதன் அவர்களே நன்றிகள் கூறி தலைவணங்குகிறேன்.
எதிர்காலத்தின் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர், பல வேலை சுமைகளை தோளில் ஏற்று நிக்கும் இளம் பெண் வருவாரா மாட்டாரா என தெரியாமல் தயங்கி நின்று அழைப்பிதழ் கொடுத்த போது, வந்து சில மணிகள் சிறப்பிப்பேன் என கூறி இனிதாக விழாவினை சிறப்பித்த செல்வி உமா குமரன் அவர்களுக்கும் என் நன்றிகள் பல பல.
இன்றைய உங்கள் விமர்சனம் தான் எமது அடுத்த ஆக்கங்களுக்கான சரி பிழை என நாம் கூறி, இந்த புத்தகத்தை விமர்சிக்க நீங்கள் வரவேண்டும் என கேட்டபோது ‘பார்ப்போம் ‘ என ஒற்றை சொல்லில் மறுத்துவிடும் இன்றைய உலகினில் வருகின்றோம் என பண்பாய் சொல்லி நன்றாக ஆய்வுரைகள் வழங்கிய என் மதிப்புக்குரிய ஐயா திரு இளையதம்பி தயானந்தா அவர்கட்கும், என் கவுரவத்துக்குரிய அம்மையார் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கட்கும், நாம் வியந்து பார்க்கும் ஐயா திரு சிவபாலன் அவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.
வரவேற்றல், விருந்தோம்பல் தமிழன் மரபும், பண்பும். இதில் எந்த குறையும் யாரும் கண்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போர் தமிழர், அதற்கமைய சொற்பிழை பொருட்பிழை இன்றி எல்லோரையும் இனிமையுடன் வரவேற்ற திருமதி சோதிகலா மோகன் அவர்கட்கும் எனதன்பினிய நன்றிகள்.
கடல் கடந்து வந்து தன் சிரமங்களை தள்ளி விட்டு என்ன வரினும் ஏற்பேன் உரையை என ஏற்புரை தந்த திரு பாலகனேஷன் அவர்களுக்கும் எனதன்பு நன்றிகள் பல,
சிரமமே பாரது குறுகிய சில நாட்களுக்குள் அழகாக நடனமமைத்து தந்த மேற்கு இலண்டன் தமிழ்பாடசாலையின் கலைத்துறையின் பொறுப்பாளராக விழங்கும் பரதகலா மாமணி றோகினி சாந்தரூபன் ஆசிரியைக்கும் சிறப்புடன் ஆடிய மாணவிகளுக்கும், அதனை ஒழுங்குபடுத்திய ஆசிரியர் திரு வேணு அவர்களுக்கும் என் நன்றிகள்.
காதுக்கினிய இசையை வேனையில் கோர்த்து எடுத்து மனதை இனிமையாக்கி வீணை இசை தந்த சகோதரி செல்வி ஆரணி சிவபாதசுந்தரம் அவர்களுக்கும் பக்கவாத்தியம் தந்த கபிலன் மருதராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல பல,
சின்னவன், என் தம்பி ஒரு சிறு தோழன் அதை விட பாடகனாய் பாடல்கள் தந்த எனதருமை தம்பி செல்வன் ரோஷனுக்கும் எனது கடைகுட்டி தங்கச்சி செல்வி தனிஷாக்கும் எனது நன்றிகள் .
நன்றிகள் சொல்லி என்னில் இருந்து உங்களை பிரிக்கவில்லை என்றாலும் நன்றிகள் சொல்லவேண்டும் இந்நாளில் நான் உங்களுக்கு.
ஒலி, ஒளி, அமைப்பு செய்தவர்களுக்கும், மேடை தந்து உதவிய ஐயப்பன் கோவில் நிர்வாகத்தினருக்கும் என் இனிய நன்றிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காகம் கல் போட்டு சேர்த்து தண்ணீரை குடித்தது போல நாங்கள் ஓடி ஓடி உங்களின் ஒத்தாசை எங்களுக்கு வேணும் புத்தகம் வெளியிட என கேட்டபோது நல்லது செய்ய எங்கள் உதவி உண்டு என தயங்காமல் சொன்ன எமது விளம்பரதாரர் VFIX Tyres UK, Anglo asian parcel service , Rasiah & co Solicitors, Rathy jewellers ltd. wembley, Vaavaa இணையம், Marylbone Estate Agent, Shakthivel Hindu Association, and Sri print and design. உங்களுக்கும் நான் என்றும் நன்றி உடையவன்.
இரவு பகல் பாரது தன் வேலை பளுவிட்குள்ளும் என்னோடு இணைந்து நிண்டு செயல் பட்ட எனது நண்பன், எல்லாவித அச்சு பதிப்புகளையும் எனக்காக இரவு இரவாக செய்து முடித்த sri printers உரிமையாளர் நண்பன் திரு மருதீசன் பரமநாயகம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
குறுகிய நேரத்தில் எமது விழாவினை தங்கள் வானொலி தொலைகாட்சிகளில் தொகுத்து வழங்கிய வெற்றிஒலி, தீபம் tv, gtv ஆகியோருக்கும் எனது நன்றிகள்,
தொடக்கத்தில் இருந்து கடைசி வரை என்னோடு கை கோர்த்து ஆலோசனைகள் தந்துதவிய ஐயா திரு. கருணைலிங்கம் அவர்களுக்கும் என் மனமுவந்த நன்றிகள்,
எல்லாவற்றுக்கும் மேலாக சொல்லாமல் செய்பவன் பெரியார்’ என்பதுக்கு இணங்க இங்கே வந்து விழாவினை சிறப்பித்து கொண்டிருக்கும் கவிஞர்கள் பெரியோர்கள் சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டோர், என் பேரன்புக்குரிய என் தமிழ் சொந்தங்களே உங்களுக்கு என் ஆயிரம் ஆயிரம் நன்றிகள், சொல்ல மறந்த நன்றிகள் இருப்பின் என் பிழை பொறுத்து என் நன்றிகளை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி.
–Kuberan Tharmaraja–
nool-005
nool-006
nool-007
nool-008
nool-009
nool-010
nool-010a
nool-010b
nool-010c
nool-011
nool-012
nool-013
nool-041
nool-014
nool-015
nool-018
nool-016
nool-019
nool-042
nool-020
nool-021
nool-022
nool-023
nool-025
nool-026
nool-027
nool-017
nool-024
nool-028
nool-029
nool-031
nool-030
nool-032
nool-033
nool-034
nool-035
nool-036
nool-037
nool-038
nool-039
nool-040
nool-041
nool-042
nool-044
nool-045
nool-046
nool-047
nool-048
nool-049
nool-050
nool-051
nool-052
nool-053
nool-054
nool-055

ad

ad