புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு


தீவகம் மற்றும் வெளிமாவட்டங்களில் கடந்த 5வருடங்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் விரும்பிய
வலையங்களில் கடமையாற்ற முடியும் என்பதனை உறுதிப்படுத்தும்  கடிதங்கள்  நேற்று வழங்கப்பட்டுள்ளன.
 
அதன்படி தீவகம் மற்றும்  வெளிமாவட்டங்களில் கடமையாற்றிய 298பேருக்கு கடிதங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 54 ஆசிரியர்களும், கிளிநொச்சி வலயத்தில், 82 ஆசிரியர்களும் முல்லைத்தீவு வலயத்தில் 35 ஆசிரியர்களும் மன்னார் வலயத்தில் 11 ஆசிரியர்களும்  மடு வலயத்தில் 20 ஆசிரியர்களும் தீவகத்தில் 54 ஆசிரியர்களுமாக 298பேருக்கு இடமாற்ற கடிதங்கள்  வழங்கப்பட்டுள்ளன. 
 
எனவே எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி முதல் தாங்கள் விரும்பிய வலயங்களில் கடமையாற்ற முடியும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சில ஆசிரியர்களின்  கடிதங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே குறித்த ஆசிரியர்கள் இன்று 2 மணிக்கு பின்னர் மாகாண திணைக்களத்திற்குச் சென்று தங்களது இடமாற்றத்திற்கான காரணம் மற்றும்  விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ad

ad