புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

உச்சமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் செய்யலாம்


19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றே கூறப்பட்டாலும் இச்சட்ட திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இச்சட்ட திருத்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றம் நேற்று கூடியபோது 19 ஆவது திருத்தச் சட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது எதிர்க் கட்சித் தலைவர், அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் 19 ஆவது திருத்தச் சட்டத்தினுள் உள்ள முரண்பாடுகள் குறித்து பேசினர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ad

ad