புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம். சங்கக்காராவின் சாதனைகள்

[
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சங்கக்காரா 124 ஓட்டங்கள் குவித்தார். ஏற்கனவே அவர் தனது முந்தைய மூன்று லீக் ஆட்டங்களிலும் சதம் விளாசியிருந்தார்.
இதன் மூலம் 44 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதத்தை ருசித்த முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (1982–1983ம் ஆண்டு), சயீத் அன்வர் (1993), தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் (2002), டிவில்லியர்ஸ் (2010), குயின்டான் டி காக் (2013), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (2014) ஆகியோர் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. நீண்ட காலமாக நீடித்த இந்த சாதனைக்கு சங்கக்காரா நேற்று முடிவு கட்டினார்.
சங்கக்காராவுக்கு இது 4வது உலகக்கிண்ணமாகும். ஆனால் தனது முதல் மூன்று உலகக்கிண்ணப் போட்டிகளில் (2003, 2007, 2011) ஒரே ஒரு சதம் மட்டும் அடித்திருந்த சங்கக்காரா இந்த உலகக்கிண்ணத்தில் 4 சதங்களை எடுத்து பிரமாதப்படுத்தியிருப்பதுடன், உலகக்கிண்ணத்தில் தனது சதங்களின் எண்ணிக்கையை 5ஆகவும் உயர்த்தியுள்ளார்.
மேலும் அவர் ஒரு உலகக்கிண்ண தொடரில் அதிக சதங்கள் நொறுக்கிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் மார்க் வாக் (1996 உலகக்கிண்ணம்), இந்தியாவின் சவுரவ் கங்குலி (2003), அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு உலகக்கிண்ணத்தில் 3 சதங்கள் அடித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
உலகக்கிண்ணத்தில் ஒட்டுமொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கை (இவரும் 5 சதம்) சமன் செய்துள்ளார்.
விக்கெட் கீப்பிங் பணியிலும் சங்கக்காரா புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 2 வீரர்களை பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
இதையும் சேர்த்து 36 ஆட்டங்களில் 54 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கும் (41 பிடியெடுப்பு மற்றும் 13 ஸ்டம்பிங்) சங்கக்காரா உலகக்கிண்ண அரங்கில் அதிக வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுவரை இந்த சாதனை வரிசையில் முதலிடம் வகித்த அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் (31 ஆட்டத்தில் 52 பேர் ஆட்டம் இழப்பு) பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ad

ad