புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி
news
 இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார்.  
 
வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலும் முழு மையான சாட்சியத்தை முன் வைத்தார்.
 
மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டதில் பலர் கொல்லப்பட் டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்தி ருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிர சுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரண டையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இரா ணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவ ரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுத ழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.
 
இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முத லாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=644983925818258815#sthash.mLWE7M9c.dpuf
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு
news
சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர்  தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
 
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், 
 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர்.
அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன்  தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன்.
 
இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை எனக் கேட்டார்கள்.
 
 எமது திறன்களை மேம்படுத்த சில வழிமுறைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுத்துக் கூறினேன். அதனை ஏற்றுக் கொண்ட தூதுவர்இ எதிர்காலத்தில் இவைகுறித்து தமது நாடு கருத்தில் கொள்ளும்  என தூதுவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 
 
ad

ad