புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வடக்கிலுள்ளவர்கள் பொலிஸில் இணையவேண்டும்; ரணில்


நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 
யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற சிவில் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர், வணிகர் கழக உறுப்பனர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
யாழ். குடாநாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக பெண்கள் அமைப்பின் பிரதி நிதி  சுட்டிகாட்டியதோடு பெண்களை தலைமைத்துவமாக கொண்டு செயற்படும் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சிகை மற்றும் சுயஉற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் சந்தை வாய்ப்பு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தனர்.

 
அதற்கு பதிலளிக்கும் போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
 
நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள்  பொலிஸில் இணைவதற்கு முன்வரவேண்டும்.
 
தற்போது நாட்டில் 200 ஆண் ,பெண்  தமிழ் பொலிஸாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகள் இனணத்து கொள்ளப்படவுள்ளார்கள்.
 
மேலும் கொழும்பில் திங்கட்கிழமை  இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad