புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

வவுனியாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் கொலை


வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று இரவு 10.30 மணியளவில் மகாரம்பைக்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வடிவேலு (வயது 45) என்பவராவார். 
 
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் உணவகம் ஒன்றினை நடாத்திவரும் இவர் நேற்று இரவு உணவகத்தைப் பூட்டிவிட்டு செல்லும் போதே அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
உடல்முழுவதும் சூட்டுக்காயங்கள் காணப்படுவதுடன் 7 வெற்றுத் தோட்டாக்களையும் வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். 
 
எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியாது எனவும் தாம் விசாரணைகளை நடாத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், நேற்று இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. நாங்கங் வருவார் என்று பார்த்துக் கொண்டிருந்தோம் ஆனால் வரவில்லை.
 
இன்று காலையே சுட்டுக்கொலை செய்யப்பட்ட தகவல் எமக்கு கிடைத்தது. எனினும் வீடு வைரவப்புளியங்குளத்தில் இருக்கும் போது ஏன் மகாரம்பைக்குளத்திற்குச் சென்றார் என்றும் தெரியவில்லை என தெரிவித்தனர்.
 
மேலும் குறித்தவர் 2000 ஆம் ஆண்டு ரேலோ இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும்  மீண்டும்  அதே ஆண்டு புளொட் அமைப்புடன் இணைந்து கொண்டு உறுப்பினராக இருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
அத்துடன்  வன்னி மாவட்டத்திற்கு ஈ.பி.டி.பி கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்றும் உணவகம்  நடாத்துவதற்கு முன்னர் சன் ரீ.வி மீள்ஒளிபரப்பு நிலையத்தினையும் நடாத்தி வந்தவர் என்றும்  அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad