புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

மோடியின் வருகை தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அகில இலங்கை சைவ மகா சபை

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ள நிலையில்  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதரின்
வருகையில் தீர்வு கிட்டவேண்டும் என கோரி அகில இலங்கை சைவ மகா சபையினால்  யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 6ஆம் திகதி குநித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


யாழ்ப்பாணத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் முதன்முறையாக வருகைதருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைவதுடன் அவரையும் வரவேற்கின்றோம்.

ஓர் நூற்றாண்டிற்கு முன்பு சுவாமி விவேகானந்தர் எமது மண்ணில் கால்பதித்து  ஆன்மீக எழுச்சியை உருவாக்கியது போல   இந்துப் பண்பாட்டின் நவயுக பாதுகாவலரான தங்கள் வருகையும் இங்குள்ளவர்களின் வாழ்வில்  மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.


மேலை நாட்டினருடைய காலணித்துவ ஆட்சியின் கீழ் எம்மை நாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையை இழந்துவிட்ட நாம் தொடர்ந்தும் சகோதர இனத்தவர்களுடனும்   எமது சுயநிர்ணய உரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக அறவழியிலும் மறவழியிலும் போராடி மிகவும் களைப்படைந்து விட்டோம்.

இந்த நிலையில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி இழப்பதற்கு எதுவுமே இல்லை எனும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இனத்தின் தலைவிதியை மாற்றுவதில் தங்களின் உன்னதமான பங்களிப்பை நாடி நிற்கின்றோம்.

 சுயாதீனமான வாழ்விற்கு எமது மக்கள் குழுமத்திற்கு  உரித்தான சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து எமது பூர்வீக நிலத்தின் பண்பாட்டுக் கோலங்களிக்கு முதன்மை வழங்க அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


மேலும் யுத்தத்திலும் அதற்குப் பின்னரும்  மிகவும் நலிவுற்று இருக்கின்ற  மக்கள் குழுமமானது மேலைநாட்டு மதக்குழுமங்களின் திட்டமிட்ட  மதமாற்றத்தால்  பூர்வீக  இந்து பண்பாட்டுக் கோலங்கள் அழிந்து வருகின்றது.

கடந்த கால போரினால்  பல்வேறு வழிகளிலும்  பாதிக்கப்பட்டு இருக்கின்ற வடக்கு , கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில்  இந்திய  நாட்டின் ஒத்துழைப்புடனான பல்வேறுபட்ட வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


அந்தவகையில் உயர்கல்வி,   தொழில்வாய்ப்பு,   கலாசாரவிருத்தி,  வீட்டுவசதி உள்ளிட்ட பாரியளவிலான நலத்திட்டங்களை தங்களின் வருகையின் போது அறிவிக்க வேண்டும்

இந்தத் தருணத்தில் கடந்த காலத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்  பாதிக்கப் பட்டோருக்கு நன்மையளித்திருப்பதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 இன்று இலங்கையில்ஆட்சிமாறிவிட்டது . ஆனால் போர் இடம்பெற்றமைக்கு நேரடி சாட்சியங்களாக அரசியல் கைதிகள்,  காணமற்போனோர் , அகதிகள் என அவர்கள் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் இல்லாது இருக்கின்றது.


எனவே தாங்கள் வருகையின் போது இவர்களின் வாழ்வில் புதுநம்பிக்கையை உருவாக்கும் வகையில் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட்டு காணாமற்போனருக்கு பிரச்சினை தீர்க்கப்பட்டு அகதிகள் யாவரும் தங்கள் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.


இவ்வாறான செயற்பாடுகள்  இடம்பெறுமானால்  காயம்பட்ட மனங்களுக்கு ஒத்தனம் கொடுப்பதாக அமையும்.

 அது மட்டுமின்றி  இந்த நாட்டிலுள்ள இனங்களிடையே உண்மையான நல்லுறவைக் கட்டியெழுப்பவும் வழிசெய்யும் என எதிர்பார்க்கின்றோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad