செவ்வாய், மார்ச் 31, 2015

பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்


புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துவிட்டதால் 2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், 

ஒரு சட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டதால் கூட்டணி வரும் என்று கூறும் கலாச்சாரம் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. மக்கள் நலனுக்காக இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது அதிமுக. இவ்வாறு பதில் அளித்தார்