புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2015

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழ்ந்து 275 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மகமதுல்லா 103 ரன்கள் எடுத்துள்ளார். பொறுப்பாக ஆடிய மகமதுல்லா (103), உலக கோப்பை வரலாற்றில் முதல் சதமடித்த வங்கதேச வீரர் என்ற சாதனை படைத்தார்.

276 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பெல் 63 ரன்கள் எடுத்தார்.  இந்த தோல்வியை அடுத்து இங்கிலாந்து அணி காலிறுதி போட்டிக்கான தகுதியை இழந்தது.

வங்கதேசம் அணியிடம் தோல்வி அடைந்ததையடுத்து, உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணி முதல் சுற்றுலேயே வெளியேறுகிறது. 

ad

ad