புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்


இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
தேவையில்லை. வெளிவரும் அறிக்கையின் பரிந்துரைகளை, நடைமுறைப் படுத்தும் உத்தரவாதத்தை இலங்கை அரசிடமிருந்து ஐ.நா. சபை பெற்றுள்ளது.
 
இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகார அதிகாரி ஜெப்ரி பெல்ட்மன், கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
 
இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூனின், அரசி யல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் வருகை தந்துள்ளார். இவர் முதல் சந்திப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று முற்பகல் 10.30 மணிக்குச் சந்தித்துப் பேசினார்.
 
இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான அரசியல் அதிகாரி, இலங்கைக்கான தூதுவர் சுபைனோ நண்டி ஆகியோரும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதி ராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
தேர்தலின் பின் இலங்கையின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும், உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக் கூறுதல், நீதியை நிலைநாட்டுதல் போன்ற விடயங்களில் செயன்முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்கும், தனது இலங்கைப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வார் என்று, ஜெப்ரி பெல்ட்மன் கூட்டமைப்பினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஏமாற்றம். இந்த அறிக்கை உரிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இந்த அறிக்கையினூடாக, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மாத்திரமல், இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கான வழியும் திறந்திருக்கும். 
 
ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்பினார்கள். ஆனால் இவ்வாறான மாற்றங்களை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஜெப்ரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
 
இதன்போது பதிலளித்த அவர், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஹுஸைனைச் சந்தித்து விட்டே வருகின்றேன். 
 
அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை அவரும் புரிந்து கொண்டுள்ளார். அதை நாங்களும் உணர்கின்றோம். இந்த அறிக்கை இப்போது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. 
 
எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் வெளியிடப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படும் போது, இன்னமும் கனதியானதாக அறிக்கை இருக்கும். இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை.
 
இலங்கையின் புதிய அரசிடமிருந்து சில உறுதிப்பாடுகள் d உத்தரவாதங்களை ஐ.நா. பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் புதிய அரசும் வழங்கியுள்ளது. 
 
அதனடிப்படையிலேயே, அறிக்கையை ஒத்தி வைப்பதற்கான முடிவு எட்டப்பட்டது. 
மேலும், ஐ.நா. அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளியிடப்பட்ட பின்னர், உள்ளக விசாரணைப் பொறிமுறையினூடாக, ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் எனவும், சர்வதேச தரத்துடன் விசாரணையை முன்னெடுப்போம் என்றும் இலங்கை அரசு உறுதிமொழி வழங்கியுள்ளது. புதிய அரசுக்கு சந்தர்பம் வழங்குவதற்காகவே, இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று, ஜெப்ரி குறிப்பிட்டுள்ளார். 
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்று கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மீள்குடியமர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற் போனோர் விவகாரம் என்பவற்றில் இன்னமும் உறுதியான எந்த முடிவும் கிடைக்கவில்லை. 
 
இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி வாயே திறக்காத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயங்களில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
 
இதற்குப் பதிலளித் ஜெப்ரி பெல்ட்மன், இலங்கைக்கு ஐ.நா. தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கும் எனக் குறிப்பிட்டார்.

ad

ad