புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

புளொட்டின் செயற்பாடு; தீர்மானிப்பவன் நானே வேறு எவருக்கும் அதிகாரமில்லை சித்தார்தன்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, வேறு எவரும் இது குறித்துத் தீர்மானிக்க முடியாது. புளொட் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பவர் நானே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எவருமல்ல.
புளொட் தனித்துச் செயற்படும் சுதந்திரமான கட்சி என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சித்தார்த்தனை வன்னி
மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் உள்ள தனி நபர்கள் தரப்புகளால் வலியுறுத்தப்படுவதாக வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற வதந்திகள் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பும் சில தனிப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.
பொதுத் தேர்தல் தொடர்பில் தேசிய கட்சிகளே பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றன. ஆகையால் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே தெளிவாகவில்லை.
ஆனால் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என்று சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன், இவ்வாறான செய்திகளும் வெளியாகின்ற போதிலும், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இதனை தெரிவிக்கவில்லை. மாறாக ஒரு சிலர் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு பேசி வருகின்றனர். இது கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

ad

ad