புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

போராளி'களை தோலுரிக்கும் தாமரை!


                                                                ண்மை செய்திகளில் பலரது புருவங்களை உயர்த்தியது கவிஞர் தாமரையின் போராட்டம் பற்றிய செய்தி.
ஆச்சர்யமாக தியாகுவின் எதிர்வினை எதுவும் கவனத்திற்கு வரவில்லை. தியாகுவின் இந்த மௌனம் எனக்கு கோழைத்தனமாகப்படுகிறது. உடல், மன, பொருளாதார ரீதியாக பெண்கள் வஞ்சிக்கப்படுவது ஒன்றும் தமிழகத்தில் புதிது அல்ல. சிலப்பதிகாரம் முதல் இதே நிலைமைதான்.
தாமரை எனக்கு ஒரு நவீன கண்ணகியாகப் தென்படுகிறார். அவரது கடிதத்தைப் படிக்கும் போது, அவர் ஒரு பணங்காய்ச்சி மரமாக தியாகுவிற்கு பயன்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. உண்மையில் தியாகு என பெயர் கொண்டவர் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார்.

அர்விந்த் கெஜ்ரிவால் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகியிருக்கிறார்.தனது மனைவிக்கு உரிய அங்கீகாரத்தை பொது வெளியில் ஏற்படுத்தியிருகிறார்.அவரது மனைவி, அவரை சாராமல் குடும் பத்தை கவனித்துக் கொண்டதற்காகவே அந்த அங்கீகாரம். 

இங்கே தாமரையோ அதையும் தாண்டி தியாகுவின் தமிழ் தேசிய அரசி யலில் தன்னாலான பங்களிப்பை செய்துள்ளார்.அதற்கான பதில் மரியா தையே 'இந்த ஓட்டம்'. இதையும் புரட்சி என தியாகு சொல்லக்கூடும். 

தமிழ் தேசியர்கள் இதனை கவனிக்க வேண்டும். குடும்ப வழக்கத்தை மறுப்பது அல்ல தமிழ் தேசியம். அது 'பின் நவீனத்துவம்'. மனைவியை ஒதுக்கியது மூலம் தியாகு ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத் துகிறார்.

இது தாமரையின் குடும்பப் பிரச்னை மட்டும் அல்ல. தாமரையின் போரா ட்டம், தியாகுவுடன் சேர்ந்து வாழ்வதற்கானது அல்ல. மாறாக தன்னலத் தை உள்ளுணர்வாக கொண்டு, பொது வெளியில் போராளியாக காட்டிக் கொள்ளும் தலைவர்களின் தோலுரிப்பிற்கே. 

-ஜெ.நம்பிராஜன் 

ad

ad